பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் குழந்தையை தமிழ் நடிகர் சரத்குமார் தனது மகள்களுடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன
மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையில் ஐஸ்வர்யாராய் குடும்பத்தினர்களை சரத்குமார் தனது மகள்களுடன் சென்று சந்தித்தார். ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் மற்றும் ஆராத்யாவுடன் சரத்குமார் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
பொன்னின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மந்தாகினி தேவி மற்றும் நந்தினி ஆகிய இரண்டு கேரக்டர்களிலும், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் சரத்குமாரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்பட பலர் நடித்து வருகிறார்கள் என்பதும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது