எனக்கு ஓட்டு போட மாட்டாங்க, நான் சொன்னா உடனே ரம்மி விளையாடுவாங்களா? சரத்குமார்

நான் ஓட்டு போட சொன்னால் மக்கள் அதைக் கேட்டு எனக்கு ஓட்டு போடுவதில்லை என்றும் ஆனால் நான் ரம்மி விளையாட சொன்னால் மட்டும் விளையாடி விடுவார்களா? என்றும் சரத் குமார் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ரம்மி விளையாட்டினால் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அதனால் ரம்மி விளையாட்டு தடைச்சட்டத்திற்கு கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

rummyஇந்த நிலையில் ரம்மி விளையாட்டுக்காக விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமாரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதனை அடுத்து அவர், ‘ரம்மி விளையாட்டிற்கு என ஒரு திறமை வேண்டும் என்றும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே ரம்மி விளையாட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரம்மி விளையாடியதால் தான் தற்கொலை அதிகரிக்கிறது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் ரம்மி விளையாட்டில் தற்கொலை செய்ததாக கணக்கு காட்டுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நான் ரம்மி விளையாட்டு தடை சட்டம் வருவதற்கு முன்பே விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்றும் அவர் கூறினார். மேலும் நான் தமிழக மக்களிடம் எனக்காக ஓட்டு போடுங்கள் என்று சொன்னபோது அவர்கள் ஓட்டு போடவில்லை என்றும் ஆனால் நான் ரம்மி விளையாட சொன்னால் மட்டும் அவர்கள் உடனே என்னுடைய பேச்சை கேட்டு ரம்மி விளையாடி விடுவார்களா? என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.