Connect with us

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக மாறிய சரத்குமார்

Entertainment

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக மாறிய சரத்குமார்

f3705ef9a971fb5935d11c230e5cf581

சரத்குமார் இதுவரை பல திரைப்படங்களில் போலீஸ் கேரக்டர்களில் நடித்திருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக ‘வேளச்சேரி துப்பாக்கிசூடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வடமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக தமிழகம் வந்து பின்னர் கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்வது தான் சரத்குமாரின் பணியாக இந்த படத்தில் உள்ளது.

சரத்குமாரின் என்கவுண்டரை எதிர்க்கும் மனித உரிமை ஆணையத்தின் அதிகாரியாக நடிகை இனியாவும் மற்றும் பல முக்கிய வேடங்களில் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

a6b578b91b87244cc89e58ef5dac2f3b-1இந்த படத்தை வேந்தன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘இன்பா’ மற்றும் ‘மயங்கினேன் தயங்கினேன்’ ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார். ‘வேளச்சேரி துப்பாக்கிசூடு’ படம் குறித்து இயக்குனர் வேந்தன் கூறியதாவது: காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை.. யாரும் போராடுவதில்லை.. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..

e77fc8f93c9ffb0f78ad7a4651241839ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம். இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.. கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top