Entertainment
எத்திராஜ் கல்லூரியில் பொங்கல் கொண்டாடிய சரத்குமார்
வரும் ஜனவரி 15ல் பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாட இருக்கின்றனர். இந்த பொங்கல் பண்டிகையை அனைத்து கல்லூரிகளிலும் முன்பே கொண்டாடிவிட்டு பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம்.

சென்னை எத்திராஜ் கல்லூரியிலும் வருடா வருடம் பொங்கல் கொண்டாடி வரும் வேலையில் இந்த வருடமும் பொங்கல் விழா களை கட்டியது.
மாணவ மாணவிகள் பலர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் நடிகை வரலட்சுமியின் தந்தையும் சுப்ரீம் ஸ்டாருமான சரத்குமார் இவ்விழாவில் கலந்து கொண்டார். கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாடினார். பொங்கல் விழா குறித்தும் பேசினார்.
பின்பு மாணவிகள் சரத்குமாருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
