சரத்குமார் நடிப்பில் 23 ஆண்டுகளை கடந்த மூவேந்தர் திரைப்படம்

சரத்குமார் நடிப்பில் கடந்த 1998ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவந்த படம் மூவேந்தர். இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, லட்சுமி, நம்பியார், ராமதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அப்போது உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த கங்கா கெளரி புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.

இயக்குனர் சுந்தர்சியின் சீடரான சி.ஜி சுராஜ் முதல் முறையாக இயக்கி இருந்த படம் இது.

இப்படத்தின் கதையமைப்பு கொஞ்சம் வித்தியாசமானது நல்ல மனம் கொண்ட ஒரு முரடனாக வரும் சரத்குமாருக்கும் அவரது மனைவியாக வரும் தேவயானிக்கும் ஏற்படும் குடும்ப பிரச்சினைகளே கதை என்றாலும் அதை நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்து இயக்கி இருந்தார் சுராஜ்.

கலகலப்புக்கு நம்பியார், அனுமோகன், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கலகலப்பாக வந்த இந்த படம் மிக வெற்றிகரமாக ஓடியது. படத்தில் சிற்பி இசையில் வந்த குமுதம் போல் வந்த குமரியே , சோக்கு சுந்தரி, வானவில்லையே பார்த்தேன் போன்ற பாடல்களும் வெற்றி பெற்றன.

கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியான இந்த படம் இன்றுடன் 23 ஆண்டுகளை கடந்து விட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment