News
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக “சரண்ஜித் சிங்” பதவி ஏற்பு!!
தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் இதில் பல மாநிலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி 10 ஆண்டுக்கு பின்னர் நடைபெற்று வருகிறது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி பதவி விலகிய பின்னர் அங்கு வேறு ஒரு முதல்வர் பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்திலும் இது போன்று சில மாதங்கள் முன்பு நடந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்தியாவில் சில தினங்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் புதிது புதிதாக முதல்வர்கள் பொறுப்பு ஏற்கின்றனர்.
அதன் வரிசையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜித் சிங் பதவி ஏற்றுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பதவியேற்றார். மேலும் அவர் சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித் சிங் பதவியேற்றதாக கூறப்படுகிறது. மேலும் நம் தமிழகத்தின் முந்தைய ஆளுநராக காணப்பட்ட பன்வாரிலால் புரோகித், சரண்ஜித் சிங்கிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
