என்ஜாய் எஞ்சாமி பாட்டு பெரிய ஹிட்டாகியும் சந்தோஷ் நாராயணனுக்கு நடந்த வேதனையான விஷயம்..

இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களுக்கும் தனி ஸ்டைல் இருக்கும் நிலையில் அதேபோன்று ஒன்றை தமிழ் சினிமாவில் தனக்கும் பின்பற்றி வருபவர் தான் சந்தோஷ் நாராயணன். அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன், தற்போது பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே என பலரும் நடித்துவரும் கல்கி என்ற பேன் இந்தியன் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். தமிழ் திரையுலகைத் தாண்டி மலையாளம், தெலுங்கு என பல இண்டஸ்ட்ரியில் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வரும் சந்தோஷ் நாராயணன், சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சந்தோஷ் நாராயணன் இசையில் ‘எஞ்ஜாய் என்ஜாமி’ என்ற ஆல்பம் பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலில் அவரது மகள் தீ மற்றும் ரேப் பாடகர் அறிவு ஆகியோர் பாடியும், பெர்ஃபார்ம் செய்தும் அசத்தி இருந்தனர். இந்த நாள் வரையிலும் பலரது ஃபேவரைட் பாடலாக என்ஜாய் எஞ்சாமி இருக்கும் நிலையில் இன்றுடன் இந்த பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.

இது பற்றி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சந்தோஷ் நாராயணன், “இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் மூலம் எனக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதையும் நான் இப்போது உங்களிடம் பகிர விரும்புகிறேன். அதாவது இந்த பாடல் மூலம் எனக்கு ஒரு ரூபாய் கூட இதுவரைக்கும் வருமானம் கிடைக்கவில்லை.

இதற்காக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனில்லாமல் போனது. மேலும் இதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் தான் நான் சொந்தமாக ஸ்டூடியோவையும் தொடங்கினேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய சேனலின் வருமானமும் இப்போது அந்த மியூசிக் லேபிளுக்கு தான் செல்கிறது. இதற்கு மேலும் இண்டிபெண்டன்ட் இசைக்கலைஞர்கள் இனி பயப்பட வேண்டாம். உங்களுக்கு கிடைப்பது கிடைத்தே தீரும்” என்றும் தனது வீடியோவில் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும் அவர் தனியாக இசையமைத்து பெரிய ஹிட்டான இந்த பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியான விஷயம்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...