பரபரப்பு..!! ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான சன்சத் டி.வி திடீர் முடக்கம்..
ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வமான செய்தி தளமான சன்சத் டி.வி செய்தி தளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவி அதை மூன்று மணி நேரம் முடக்கிவைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் சார்பில் நடத்தும் அரசு நிகழ்ச்சிகள், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நடத்தும் நிகழ்ச்சிகளை ஒன்றிய அரசான சன்சத் டி.வி நேரலையில் வழங்கிவருகிறது. அத்துடன் நாடாளுமன்ற நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்புகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சன்சத் டி.வி-யின் யூடியூப் பக்கத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் சன்சத் டிவி என்னும் பெயரை ஈத்தேரியன் என மாற்றினர்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தொலைக்காட்சியின் தொழில்நுட்ப குழு யூட்யூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொடங்கியது. அதிகாலையில் 3.15 மணி அளவில் சன்சத் டி.வியின் யூட்யூப் பக்கத்தை மீட்கப்பட்டதாக தொலைக்காட்சி டிவியின் இணைச்செயலாளர் புனித்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் சன்சத் டி.வியின் இணைய அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் பணிகள் மேற்க்கொள்ளப்படும் என புனித்குமார் குறிப்பிட்டுள்ளார். இணைய பாதுகாப்பில் இந்தியா கேள்விக்குறியாக தள்ளப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் கூறப்பட்டு வந்த நிலையில் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
