சங்கராபுரம் பட்டாசுக்கடை வெடிவிபத்து: பட்டாசுகளை முறையாகப் பாதுகாக்காததே காரணம்!

தற்போது நம் தமிழகத்தில் பட்டாசு கடைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.  இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் வியாபாரம் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு கடை ஒன்றில் விபத்து ஏற்பட்டது.உயர்நீதிமன்றம்

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கருத்தையும் கூறியுள்ளது.அதன்படி கடைகளில் பட்டாசுகளை முறையாகப் பாதுகாக்காததே சங்கராபுரம் போன்ற வெடி விபத்துக்கு காரணமாக அமைகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யா என்பவரின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பு கூறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சாலை அகரம் கிராமத்தில் விதியை மீறியதாக நித்யாவின் பட்டாசு கடைக்கு அக்டோபர் 28 ஆம் தேதியில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பட்டாசு கடைக்கு சீல் வைக்கப்பட்டது எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்திய வழக்கு தொடுத்திருந்தார்.

பட்டாசு கடைகள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்று அரசு தரப்பு கூறியுள்ளது. அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரண்டு தளங்களில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக அரசு தரப்பு வாதம் புரிந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பட்டாசு கடை உரிமையாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment