பிரிவு உபசார விழா வேண்டாம்! கொல்கத்தா புறப்பட்டார் சஞ்சீப் பானர்ஜி;

சில நாட்களாக நம் தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஏனென்றால் நம் தமிழகத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி எதிர்பாராதவிதமாக திடீரென்று மேகலாயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சஞ்சீவ் பானர்ஜி

இதனால் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவானது. அதோடு மட்டுமல்லாமல் மேகலாயா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருந்தார்.

அதன் வரிசையில் தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கொல்கத்தா புறப்பட்டார். மேகலாயாவுக்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கொல்கத்தா புறப்பட்டார்.

தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி. அதோடு பிரிவு உபசார விழாவை தவிர்த்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சென்னை வீட்டை காலி செய்துவிட்டு கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment