இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!

சிவராத்திரி வந்தாலே இரவு முழுவதும் கண்விழித்து இருக்க வேண்டும். ஒரே அசதியாக இருக்கும். மறுநாள் நல்ல தூக்கம் வரும் என்று பலரும் நினைப்பதுண்டு. இறைவனின் பேராற்றலை அந்த இனிய நாளில் தான் நாம் நீண்ட நேரம் உணர முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் அந்த இறை உணர்விலேயே இருந்து நாம் கடவுளை வழிபட வருஷத்தில் ஒருநாளாவது இத்தகைய அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதே என்று உணர்ந்து அந்த நாளைத் தவறவிடாமல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

Mahasivarathiri2
Mahasivarathiri2

அன்றைய நாளில் நாம் கொண்டாட வேண்டிய நாள். பெரிய பெரிய சிவாலயங்களுக்குச் சென்றால் பக்திப்பாடல்கள் கமழும் இன்னிசைக் கச்சேரி, நாட்டியம், பக்தி நாடகம், சொற்பொழிவு என்று களைகட்டுவதை நாம் காணலாம்.

அதே போல் ஒவ்வொரு ஜாம பூஜைக்கும் இடையில் பிரசாதம் கொடுத்து பக்தர்களின் பசியாற்றுவதையும் அவர்களுடன் இணைந்து பக்திப்பரவசத்துடன் அன்றைய நாள் முழுவதையும் நாம் பக்திப்பெருக்குடன் லயித்திருப்பதையும், இறைவனைப் பற்றியே அதிகம் சிந்தனை கொண்டிருப்பதையும் வேறெந்த நாளிலும் நாம் காண இயலாது.

அன்றைய தினம் ஒரு நாள் நாம் இறைவனை வழிபடுவது ஆண்டு முழுவதும் கடவுளைத் தரிசித்ததற்குரிய பலனைப் பெறலாம். இந்த இனிய நாள் வரும் சனிக்கிழமை (18.02.2023) அன்று வருகிறது. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.

வருகிற சிவராத்திரி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதோஷமும் சேர்ந்து வருகிறது. அதிலும் சனிப்பிரதோஷம். அதனால் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த இனிய நாளில் பிரபஞ்ச ஆற்றலை அதிகமாக உணரலாம். அன்றைய தினம் என்னென்ன விஷயங்களைக் கடைபிடிப்பது என்று பார்க்கலாம்.

இறைவனைப் பார்த்துக் கொண்டே நம் மனமானது உள்ளார்ந்த உணர்வை அனுபவிக்கும்போது கிடைக்கும் இன்பமானது வேறெங்கும் கிடைக்காது.

அருகில் உள்ள சிவாலயங்கள் பராமரிப்பின்றி இருந்தாலும் 10…..15 சிவனடியார்கள் சேர்ந்து அந்த ஆலயத்தைச் சுத்தம் செய்து சிவராத்திரிக்கு ஏற்பாடு செய்து நாலு கால பூஜையையும் எடுத்து செய்தோமென்றால் மிகவும் நல்லது. அந்த சிவாலயமும் மீண்டு வரும்.

Mahasivarathiri3
Mahasivarathiri3

மக்கள் அனைவரும் உங்களுக்குக் கைகொடுப்பார்கள். பெரிய பெரிய கோவில்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை. இறைவன் பொதுவானவன்.

சனிப்பிரதோஷத்தை முடிச்சிட்டு மகாசிவராத்திரி விரதத்தையும் கடைபிடிக்க வருகிறோம். தற்போது நடந்த கிரகப்பெயர்ச்சியால் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தாலும் சனிப்பிரதோஷத்தால் அவை எல்லாம் நிவர்த்தியாகும்.

மகாசிவராத்திரி நமக்கு எல்லையற்ற ஆற்றல் உள்ளதாக இருக்கும். விடிய விடிய கண்விழித்து இருந்து சிவன் கதைகளைக் கேட்பதும், அவரது பெருமைகளைப் பேசுவதும், பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாராயணம் செய்வதும் நமக்குப் பேராற்றலை வழங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...