Entertainment
கதறி அழுத சாண்டி … என்னதான் நடந்தது?
பிக் பாஸ் தொடங்கி இரண்டாவது வாரம் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் சரவணன், தர்ஷன், சாண்டி, ஆகியோர் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் தனது டான்ஸ் மட்டும் பாடல் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி.
கடந்த 1986ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த இவர் நேற்று தனது 33ஆவது பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடுவாரா? என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இவரது உண்மையான பெயர் சந்தோஷ் குமார். தொலைக்காட்சியில் அறிமுகமானதைத் தொடர்ந்து தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
கடந்த 2017ம் ஆண்டு தோரதி சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இவரது பிறந்தநாள் நேற்று ஜூலை 5. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென சாண்டிக்கு வாழ்த்து கூறி அவரது குழந்தையின் அழுகுரல் ரிங் டோன் ஒலிபரப்பப்பட்டது. இதையடுத்து அவரது குழந்தை இவர் புகைப்படத்தை கொஞ்சும் ஒரு வீடியோ ஒன்றும் அங்குள்ள டீவியில் ஒளிபரப்பட்டது. இதனைப் பார்த்து சாண்டி குழந்தையை நினைத்து கதறி அழுதார்.
சாண்டியின் பாசம் பார்ப்போரின் மனதை உருக்கும்படி இருந்தது.
