Entertainment
புறணி பேசத் துவங்கிய சாண்டி- கவின்!!
விஜய் தொலைக்காட்சியில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக் களமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
தற்போது பிரச்சினையை மீண்டும் அதிகரித்து, டிர்பியை எகிறச் செய்ய வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இவர்கள் நிச்சயம் பழி தீர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

நேற்றைய நிலையில், மோகன் வைத்யாவும், ஷாக்சியும் சேரன், வனிதா, ஷெரினுடன் பேசிக் கொண்டிருக்க, அதனைப் பொறுக்கமுடியாத சாண்டி அன்ட் குரூப் புறணி பேசுகிறது.
வெளியே என்ட்ரி டோர் அருகே அமர்ந்தபடி, எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் எப்படி சென்றாயோ, அப்படியே திரும்ப வந்திருக்கிறாய் என்று அபிராமியிடம் சொன்னார் சாண்டி, அபிராமி நான் ஜாலிக்காகத்தான் இங்கு வந்தேன் என்றதும், உள்ளே 2 பேர் பழி வாங்க வந்திருப்பதாகக் கூற, அது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என அபிராமி சொன்னார். நிச்சயம் கவின் செய்த அம்பலங்கள் இதிலிருந்து வெளியாகும் என்று தெரிகிறது.
