Entertainment
நைனா இல்லாத சோகத்தில் சாண்டி மற்றும் கவின்!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களில் ஒருவரான மோகன் வைத்தியா நேற்று முன் தினம் வெளியேற்றப்பட்டார். இது சாண்டி, கவின் ஆகியோருக்கு மிகவும் வருத்தமளித்தது.
மோகன் வைத்தியா வெளியேறியதை தொடர்ந்து கவினும், சாண்டியும் அவருடைய ஞாபகமாக வீட்டுக்குள் உலா வருகின்றனர். இதில், சாண்டி அவரை நினைவூட்டுபடி, மோகன் வைத்தியா போல உடையணிந்து, போட்டியாளர்களிடம் விளையாடிக் கொண்டிருந்தார்.

மோகன் வைத்தியாவுடன் நெருக்கமாக இருந்த சாண்டி, மோகன் வைத்தியாபோல உடையணிந்து விளையாடிக் கொண்டிருந்த சாண்டி, அவருடைய பாவனைகளை அழகாக செய்து நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாக்கினார். இதனால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக இருந்தது. ‘நைனா ஓ நைனா’ என்ற பாடலை பாடி கவினும், சாண்டியும் மோகன் வைத்தியா நினைவலைகளை நிகழ்ச்சி முழுக்க பேசிக்கொண்டிருந்தனர்.
ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாய் டாடி டாடி என்று அழைத்துவந்த முகின் மற்றும் தர்ஷன் பெரிதாக வருத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாக முகின் தன்னுடைய வளர்ப்புப் பிள்ளை என்றே கூறி வந்தார் மோகன் வைத்யா. ஆனால் அவர் பெரிதாக் வருத்தப்பட்டதாக எதுவும் தெரியவில்லை.
