ரப்பர் செருப்புகளுக்கு மாற்றாக சாணி செருப்பு… விவசாயியின் வித்தியாச முயற்சி….

கிராமங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளில் குறைந்தது ஒரு மாடாவது இருக்கும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருவதால் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். ஏனெனில் கால்நடைகளின் சாணம் விவசாய நிலத்திற்கு நல்ல உரமாக பயன்படும் என்பதால் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள்.

இதுதவிர மாட்டு சாணங்களில் தற்போது நிறைய பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக மாட்டு சாணத்தில் இருந்து விபூதி தயாரிப்பது, சாண எரிவாயு தயாரிப்பது போன்றவை உள்ளன. ஆனால் சட்டீஸ்கரை சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டு சாணத்தை வைத்து புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை பகுதியை சேர்ந்த ரித்தேஷ் அகர்வால் கால்நடைகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பயன்பாடுகளை குறைக்கும் விதமாக ரித்தேஷ் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

ஆச்சரியமாக உள்ளதல்லவா. பெரும்பாலும் காலணிகள் லெதர் மற்றும் ரப்பர் போன்றவைகளால் தான் தயாரிக்கப்படுகிறது. இவற்றின் கழிவுகள் மக்காமல் மண்ணிற்கு கேடு விளைவிக்கும். எனவே மாட்டு சாணத்தில் காலணிகள் தயாரித்து ரித்தேஷ் விற்பனை செய்து வருகிறார்.

இந்த செருப்பு தண்ணீரில் நனைந்தாலும் கெட்டுப் போகாதாம். ஒரு ஜோடி செருப்பின் விலை 400 ரூபாய் தானாம். மேலும் இதனை போட்டுக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு நன்மை ஏற்படும் என ரித்தேஷ் கூறியுள்ளார். மாட்டு சாணத்தை வெறும் உரமாக மட்டுமே பயன்படுத்தும் மக்கள் மத்தியில் ரித்தேஷின் இந்த முயற்சி பாராட்டிற்குரியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment