தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நாட்கள் வரை தான் நடிகைகளுக்கு மார்க்கெட் இருக்கும். அதன் பின்பு அவர்களின் மார்க்கெட் காணாமலேயே போய்விடும். ஏனென்றால் அவர்கள் திருமணம் ஆனபின்பு பெரும்பாலும் படம் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள்.
அவர்கள் வரிசையில்தான் காணப்படுகிறார் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மிக பெரிய நடிகையாக வலம் வந்தவர். அதுவும் குறிப்பாக சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.
மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதியகீதை திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது திருமணத்திற்குப் பின்பு படம் நடிக்கும் வாய்ப்பை மெல்ல மெல்ல புறக்கணித்து கொண்டு வந்தார்.
ஆயினும் அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுவார். அந்த வகையில் தற்போது தனது புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த யில் காணப்படுகின்றனர்.