Connect with us

சனாதனம் வேறு மதம் வேறு!! இரண்டையும் ஒப்பிட்டு பேசக்கூடாது;

ஆர் என் ரவி

தமிழகம்

சனாதனம் வேறு மதம் வேறு!! இரண்டையும் ஒப்பிட்டு பேசக்கூடாது;

எந்த ஒரு ஆளுநருக்கும் இல்லாத வகையில் தற்போதைய தமிழக ஆளுநர் ரவிக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. அவர் சென்ற இடங்களில் கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது அவர் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர் சனாதனவும் மதமும் வேறுவேறு, சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என்று கூறினார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி உரையாற்றிக் கொண்டிருக்கிறார். மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என்றும் கூறினார்.

சட்டத்தில் கூறப்பட்ட மதசார்பின்மை, வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கு நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் ஆளுநர் கூறினார். இதனால் மக்கள் சனாதனத்தையும் மதத்தையும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்றும் அதனை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top