சனம் ஷெட்டி புகார்: ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர்!

6633de80ae159fd8ba7f24da677aed90

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சனம்ஷெட்டி என்பதும் இவருக்கும் பிக்பாஸ்-3 போட்டியாளரான தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும், அதன்பின் முறிவு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த சனம் ஷெட்டிக்கு திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து உள்ளது என்பதும் தற்போது அவர் தமிழ் தெலுங்கில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சனம்ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில் திடீரென பாலியல் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் தனக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி மர்ம நபர் ஒருவர் தொல்லை தருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சனம்ஷெட்டி புகார் அளித்துள்ளார்

இந்த புகாரை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். மேலும் சனம்ஷெட்டி தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களை அடங்கிய ஆதாரங்களையும் காவல்நிலையத்தில் அளித்துள்ளார் என்றும், அதன் பெயரில் மர்ம நபரை காவல்துறையினர் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment