வாழ்த்து தெரிவித்த சனம்… இதற்கு ஆரி என்ன சொன்னார் தெரியுமா?

967cd30d77d02d9a5b4be0746e3ea9b5

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். 
அதேபோல் ஆரிக்கு கொடிக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஆரியும் சனம் ஷெட்டியும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் பிக்பாஸ்க்கு பிறகு ஆரிக்கு வாழ்த்து பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். 

அந்த பதிவிற்கு பதில் பதிவு வெளியிட்ட ஆரி சனம் ஷெட்டியை “உண்மையான போராளி” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு தற்போது பதிலளித்துள்ள “சனம் ஷெட்டி நிஜவாழ்க்கை ஹீரோவிற்கு எனது சல்யூட். நாம் இருவரும் உண்மைக்காக மட்டுமே குரல் கொடுத்தோம். 

அதிலும் நேர்மை மற்றும் மனஉறுதியின் சின்னம் நீங்கள்தான். தலை வணங்குகிறேன். உங்களை தெரிந்து கொண்டதற்காக  கடவுளுக்கு நன்றி. உங்களை மென்மேலும் வாழ்க்கையில் ஆசீர்வதிகட்டும்” என்று கூறியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.