திருமணம் பற்றி பதிவிட்ட சனம் செட்டி

365ed317a297a76e417b325b7081df7a

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இதனையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் சனத்திற்கு ஆதரவாக பதிவிட்டனர். ஒருவேளை மீண்டும் சனம் செட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வாரங்களும் இருந்தது. இந்நிலையில் சனம் ஷெட்டி புடவை கட்டும் நேரங்களில் தனது நெற்றியில் குங்குமம் இடுவதை பல இடங்களில் பார்க்க முடிந்தது. 

உடனே ரசிகர்கள் சிலர் சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அப்படியே ரசிகர் ஒருவர் “எனக்கு ஒரு சந்தேகம். சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவங்க ஏன் நெற்றியில் குங்குமம் வைக்கிறாங்க” என்று என்பதுபோல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சனம் செட்டி “ஹாஹா பலரும் இதே கேள்வியை தான்  கேட்கிறார்கள். 

எனக்கு இன்னும் திருமணமாகவில்லை அன்பர்களே. உங்கள் எல்லாருடைய ஆசீர்வாதங்களுடன் ஒரு நாள் நடக்கும் என்று நம்புகிறேன். எங்கள் வீட்டில் நெற்றியில் குங்குமம் வைப்பது இல்லை திருமணமான பெண்களுக்கு என்று வரையறுக்கப்படுவது இல்லை” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.