Technology
மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்12!
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டதாக உள்ளது.
சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.
இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.
கேமரா: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.
மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.
பேட்டரி: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.
இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.
