Technology
இன்னும் நான்கு நாட்களில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!
சாம்சங் நிறுவத்தின் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மார்ச் 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 பிக்சல்கள் தீர்மானம், 90Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம்.
சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இருக்கலாம்.
இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இயங்குவதாக இருக்கலாம்.
கேமரா அமைப்பு: கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி செகன்டரி சென்சார், 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32எம்பி செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கலாம்.
பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இருக்கலாம்.
இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டு இருக்கலாம்.
