கடைதோஷம் மனைதோஷம் அனைத்தும் நீக்கும் சாம்பிராணி தூபம்

cb021fc0f96e1a7ff4981c0f409a8e3d

காலையில் எழுந்து ஒருவர் தன் வியாபார நிறுவனத்தை திறக்கும்போது தெய்வ வழிபாடு செய்து விட்டு கடை முழுவதும் நல்ல சாம்பிராணி தூபம் இட வேண்டும் மணக்க மணக்க சில நிமிடங்கள் சாம்பிராணி தூபம் போடுவது மிக சிறப்பானது. உங்கள் தொழிலை பார்த்து பொறாமைப்படுபவர்கள், உங்களை பார்த்து பொறாமைப்படுவர்கள் என நிறைய பேர் இருப்பார்கள். இதனால் தொழில் தடை படும் 1000 ரூபாய் வருமானம் வர வேண்டிய இடத்தில் அப்படியே பாதியாய் குறைந்து 500 ரூபாய் வரும் நாம் தேவையில்லாமல் அந்த 1000 ரூபாய் வருமானத்தை இழக்க கூடாதல்லவா அதனால் தினமும் காலையும் மாலையும் சாம்பிராணி தூபம் இடவேண்டும். இதனால் தெய்வங்கள் அந்த இடத்தில் குடியேறி சுபிட்சம் உண்டாகும்.

தினமும் சாம்பிராணி தூபம் போட்டால் சிறப்பு இப்போது உள்ள அவசர யுகத்தில் பல கடைகளில் செய்வது இல்லை, சிலர் வெள்ளி செவ்வாய் மட்டும் போடுகிறார்கள். சாம்பிராணி தூபம் போடும்போது சுத்தமான ஒரிஜினல் சாம்பிராணி வாங்கி குச்சிகளை , கட்டைகளை எரித்து அதில் தூபம் போட வேண்டும். முக்கியமான மலைக்கோவில்கள் பலவற்றில் ஒரிஜினல் சாம்பிராணி கிடைக்கும்.

இதே போல வீட்டிலும் தினமும் மனம் தளராமல் சாம்பிராணி தூபம் போட வேண்டும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் இதனால் அழிந்து வீட்டில் நிம்மதி பிறக்கும் இதை தொடர்ந்து செய்வது முக்கியம் ஒரு இரு நாள் ஒரு மாதம் என செய்து விட்டு எனக்கும் ஒண்ணும் வரவில்லை என புலம்பக்கூடாது தொடர்ந்து செய்து வர நமக்கு இருக்கும் சோதனைகள் வேதனைகள் கொஞ்சமாவது மாறும் இது உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.