எம்மாடியோ..! சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை இத்தனை கோடியா ?
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 1 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் உண்டியலில் கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் ஏராளமான வெளி மாநில பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாதத்திற்கான காணிக்கை எண்ணும் பணியானது கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதனிடையே உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கோவில் மண்டபத்தில் கோவில் அதிகாரிகள் பணியாளர்கள், தன்னர்வாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியை தொடங்கினர்.
கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 493 ரொக்கமும் 2.5 அரை கிலோ தங்கமும் , 3.5 வெள்ளியும், 99 ரூபாய் வெளிநாட்டு பணமும் கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
