முடக்கப்பட்ட சமந்தாவின் வலைத்தள பக்கங்கள்! காரணம் தெரியுமா?

நடிகை சமந்தா சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் வந்த ‘ஓ சொல்றியா’ என்ற பாடலுக்கு நடனமாடி உலக புகழ்பெற்றார்.அதை தொடர்ந்து நடிகை சமந்தா சாகுந்தலம், யசோதா, குஷி ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் ,இந்த படங்களின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

சமந்தா நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று விடுவதால் அவரை படத்தில் இடம்பெறச் செய்வதற்கு தயாரிப்பாளர்ளும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unnamed 14 1

இந்நிலையில் நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 24 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார், அவருடைய ஒவ்வொரு பதிவும் இலட்சக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பெறும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் பதிவு வந்ததால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? என குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

unnamed 13

இதுகுறித்து பரபரப்பு ஏற்பட சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு தவறாக இடம்பெற்று விட்டது எனவும் தற்போது அது சரி செய்யப்பட்டது என்றும் மீண்டும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் உடல்நிலை : மருத்துவமனை அறிக்கை!

இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் மனநிம்மதி அடைந்துள்ளனர். நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவது சில வணிக பொருட்களை விளம்பரம் செய்தும் வருமானம் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment