தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த உடன் பல்வேறு நெகட்டிவ் கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் குவிய தொடங்கியது.
இதனை சற்றும் கண்டுகொள்ளாத சமந்தா சினிமா மற்றும் போட்டோ ஷூட் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தார். அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா படத்தின் ஓ அண்டவா பம்பர் ஹிட் கொடுத்தது.
அதேசமயம் நடிகை சமந்தாவின் மார்க்கெட் எகிற தொடங்கியது. அதன் படி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவந்த யசோதா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக மையோசிடிஸ் என்ற நோயால் கடும் அவதிபடும் சமந்தா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இதனால் குஷி படத்தில் நடித்த பிறகு சமந்தா சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனிடையே சிகிச்சைக்காக பல்வேறு நாடுகளுக்கு செல்ல இருப்பதால் சினிமாவில் விலக இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், சமந்தாவின் இத்தகைய முடிவால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.