சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: எப்போது தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் மகாகவி
காளிதாசனின் புகழ்பெற்ற சமஸ்கிருத நாடகமான ‘சாகுந்தலம்’ என்ற புராண கதை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மதுபாலா, கெளதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, சச்சின் கெடேகர், கபீர் பேடி மற்றும் ஜிஷு சென்குப்தா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதே போல் சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகன் நடித்துள்ளார்.தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி , தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகும் இப்படத்தினை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

769929

இந்த சூழலில் சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் அப்டேட் ஒன்று இணைத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, நவம்பர் 4 ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.