தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக நடித்து வருகிறார். தற்போழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமந்தா முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன்,சூர்யா,விஷால் என அனைவருடன் ஜோடியாக நடித்துள்ளார். சென்னையில் பிறந்த இவரின் உண்மையான பெயர் யசோதா, இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
தற்போழுது கனவு கன்னியாக வளம் வரும் சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பார்.தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் சில நாட்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்துள்ளார்.
தற்போழுது பிசியாக தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.சமந்தா திருமண பிரிவிற்கு பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு படுங் கவர்ச்சியாக நடனம் போட்டிருந்தார்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் சமந்தா நடித்திருந்தார் மேலும் சமந்தா சகுந்தலம் , குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் – படப்பிடிப்பில் இணைந்த ஹீரோயின்கள்!