Connect with us

சமநதாவின் அடுத்த படமும் முடிந்தது

Entertainment

சமநதாவின் அடுத்த படமும் முடிந்தது

 a39c06285566aaa45b7c4feefcec6352-1

நடிகை சமந்தாவுக்கு இந்த ஆண்டு ராசியான ஆண்டு என்றே கூறலாம். நடிகையர் திலகம், இரும்புத்திரை மற்றும் ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆகிய மூன்று படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி மூன்றுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் இந்த மூன்று படங்களும் அவரது திருமணத்திற்கு பின்னர் வெளிவந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடித்த ‘சீமராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது சமந்தா நடித்து வந்த இன்னொரு திரைப்படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சமந்தா சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3e9660065e3ba4ee2de234a38692ca6a`ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top