ஹீரோக்களுக்கு இணையாக பான் இந்தியா படத்தில் களமிறங்கிய சமந்தா…!

சமீபகாலமாகவே தென்னிந்திய சினிமாவில் பான் இந்தியா படங்களின் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பான் இந்தியா படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஷாலின் மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. இந்நிலையில் நீங்க மட்டும் தான் பான் இந்தியா படங்களில் நடிப்பீங்களா நானும் உங்களுக்கு போட்டியா நடிக்கிறேன் என்பது போல நடிகை சமந்தாவும் பான் இந்தியா படம் மூலம் களத்தில் இறங்கி உள்ளார்.

அதன்படி இயக்குனர் கிருஷ்ண பிரசாத் இயக்கத்தில் சமந்தா நடித்து வரும் யசோதா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தமிழ் நடிகை வரலட்சுமி சமந்தாவுடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது யசோதா படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதன்படி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மணிசர்மா இசையில் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மேலும் இப்படம் சமந்தாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோக்களுக்கு இணையாக சோலோ நாயகியாக பான் இந்தியா படம் மூலம் களமிறங்கும் சமந்தாவிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment