
பொழுதுபோக்கு
தளபதி- 67 படத்தில் வில்லியாக களமிறங்கும் சமந்தா..!! இது தேவையா?
அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படமானது வசூலில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் லோகேஷன் அடுத்த படமான தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தெரிவித்த நிலையில் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு இன்னும் சில வாரங்களில் படத்திற்கான புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் விக்ரம் படத்தின் தொழில்நுட்பக் குழுவே தளபதி 67 படத்தில் நடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில் மாஸ்டர் படத்தில் லோகேஷ் இயக்கத்தில் நடித்த விஜய் மீண்டும் தளபதி 67-ல் கூட்டணி சேர்ந்துள்ளார். தற்போது தளபதி 67-படமானது முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டார் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
