தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையான சமந்தா,புஷ்பா படத்தில் வெளியான ஊ அண்டாவா மாமா பாடலில் தனது கவர்ச்சியான நடனத்தால் உலகளவில் பிரபலமடைந்துள்ளார்.
தற்போழுது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ‘குஷி’ படத்திற்காக இணைந்துள்ளனர்.இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இராணுவ பின்னணியில் காதல் கதைக்களத்தில் ரொமான்டிக் காமெடி ஜானரில் படம் அமைக்கப்படுகிறது. காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து சமந்தா நடிகர் ஆயுஷ்மன் குரானாவுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் கையொழுத்திட்டுள்ளார், இதன் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படம் நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் களத்தில் ‘தனித்துவம் வாய்ந்ததாகவும், புதிரானதாகவும்’ இருக்கும் என கூறப்படுகிறது. சமந்தாவை படத்தில் இணைப்பதற்கான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், அவரது சம்பளம் ,படப்பிடிப்பு தேதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறதாம். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில் சமந்தா நடித்த யசோதா என்ற படத்தில் ரிலீஸ் தேதி தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போகலாம் இந்தப்படம், பெண்களை மையமாகக் கொண்ட அறிவியல் த்ரில்லர் ஜேனரில் உருவாகி வருகிறது.
மாஸாக என்டரி கொடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்! பாக்கவே தீயா இருக்கே.. வைரல் வீடியோ!