மீண்டும் காதலுக்கு ஓகே சொல்லும் சமந்தா ?.. அதுக்குள்ள என்ன அவசரம்!!
சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தவுடன் சமூகவலைதளங்கள் பல்வேறு சர்சைகள் எழுந்து வந்தன.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத சமந்தா நிறைய படங்களில் கமிட் ஆகி கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலான ஒ சொல்றியா மாமா என்னும் பாடல் இணையத்தை தெறிக்க விட்டது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த சமந்தா தற்போது இந்தி துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அதே போல் யசோதா, சகுந்தலம் போன்ற படங்களை தொடர்ந்து வெப்சீரிஸிலும் நடிக்கம் ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் ஒருவரை காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவியது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக காதல், திருமணம் போன்ற எண்ணங்கள் தற்போது சுத்தமாகவே இல்லை என்றும் எதிர்காலத்தில் அவர் விரும்பும் காதல் எங்கேனும் கிடைத்தால் அவர் ஏற்றுக்கொள்வார் என பாலிவுட் லைட் இணையதளம் கூறியுள்ளது.
