நான்கு வருட மகிழ்ச்சியான திருமணத்திற்குப் பிறகு சமந்தாவும் நாக சைதன்யாவும் தங்கள் பிரிவை அறிவித்து தங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். சமந்தா தனது விவாகரத்து மற்றும் சினிமா வாழ்க்கையைப் பற்றி தகவல்கள் கொடுத்தாலும், நாக சைதன்
யா தனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து எதுவும் கூறாமல் இருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், அவர் இதைப் பற்றித் பேசியுள்ளார், மேலும் தனது முன்னாள் மனைவியுடன் மீண்டும் பணியாற்றுவாரா என கேள்வி கேட்கப்பட்டது பதிலளித்தார் அவர் அதில், “அது நடந்தால் பைத்தியமாக இருக்கும். ஆனால் எனக்குத் தெரியாது, பிரபஞ்சத்திற்கு மட்டுமே தெரியும். பார்க்கலாம்” என்றார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை தனது படங்களில் “துரதிர்ஷ்டவசமாக, இந்த வேலையின் ஒரு பகுதியாக உங்கள் தனிப்பட்ட இடமும் ஒரு கதையாக மாறுகிறது. அதனால் பாதிக்கப்படுவதா இல்லையா என்பது என் பொறுப்பு. ஒவ்வொரு பிரபலமும் அந்த அழைப்பை எடுக்க வேண்டும்.
எனது தொழில்முறை சாதனைகளை விட எனது தனிப்பட்ட வாழ்க்கை பெரிய தலைப்புச் செய்தியாக அமைகிறது என்பது வெறுப்பாக இருக்கிறது. ஆனால் நான் நினைக்கிறேன், நான் என் தொழிலில் கடினமாக உழைக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கைத் கஷ்டங்கள் வந்து போகும்”. என கூறியிருந்தார்.
கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ!
சைதன்யா மற்றும் அமீர்கானின் லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் கரீனா கபூர் மற்றும் மோனா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். மறுபுறம் கைநிறைய படங்களை வைத்திருக்கும் சமந்தாவிற்கு அடுத்ததாக சகுந்தலம் மற்றும் யசோதா படங்களில் நடிக்கிறார்.