தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் வளம் வருபவர் சமந்தா முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக நடித்து வருகிறார். தற்போழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமந்தா முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன்,சூர்யா,விஷால் என அனைவருடன் ஜோடியாக நடித்துள்ளார்.தற்போழுது சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பார்.தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் சில நாட்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்துள்ளார்.
தற்போழுது பிசியாக தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.சமந்தா திருமண பிரிவிற்கு பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு படுங் கவர்ச்சியாக நடனம் போட்டிருந்தார்.மேலும் சமந்தா சகுந்தலம் , குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
“புஷ்பா” படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்காக ரூ.2 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் சமந்தா, தற்போழுது தனது சம்பளத்தில் உயர்த்தியுள்ளார் சமந்தா. அவர் நடிக்கவிருக்கும் படமான “யசோதா” மற்றும் குணசேகரின் “சாகுந்தலம்” படங்களுக்கு தலா 2.5 கோடி சம்பளம் வாங்கினார்.
ஆனால், தற்போது கூடுதலாக ஒரு கோடி பெறுகிறார். ரூ. 3.5 கோடிக்கு குறைவான புதிய சலுகைகளை அவர் ஏற்கவில்லை என எங்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமந்தா தனக்கு இந்திய அளவில் ஒரு முறையீடு இருப்பதாக கூறுகிறார்.
அடுத்தடுத்து இணையத்தை கலக்கும் வாரிசு படக்குழு ! வெளியான 30 நொடி டான்ஸ் வீடியோ !
சமந்தா தற்போது ஹிந்தி வெப் சீரிஸிலும், தெலுங்கு காதல் நாடகமான ‘குஷி’யிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் ‘பேமிலிமேன் 2’ என்ற வெப் தொடரில் நடித்து இந்தி திரையுலகிலும் பிரபலமானார் சமந்தா. இதில் பெண் போராளியாக வந்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார்.
இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் இந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவானும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.