உங்க கூட அதை பண்ணனும்… ஆபாச கேள்வி கேட்ட ரசிகருக்கு சமந்தா நெத்தியடி பதில்!
சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததால் சமூகவலைதளங்கள் பல்வேறு சர்சைகள் எழுந்து வந்தன.
ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலான ஒ சொல்றியா மாமா என்னும் பாடல் இளைஞர்கள் மத்தியில் தாறுமாறாக பட்டைய கிளப்பியது.
இந்த நிலையில் அருவி போல எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்டது தான் வாழ்க்கை அதை ரசிக்க வேண்டும் அல்லது சகித்துக் கொள்ள வேண்டும் என சமீபத்தில் அதிரபள்ளி அருவி அருகே எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு சிறிது நேரம் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் உரையாட செலவழித்தார்.
அப்போது ஒரு ரசிகர் உங்களுடைய காதல் கணவரான நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தவுடன் நீங்கள் தைரியமா எப்படி இருக்கீங்க? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த சமந்தா பெரிய துன்பங்களை எதிர்கொண்டால்
தைரியம் தானாக வந்து விடும் என கூறினார். அப்போது மற்றோரு ரசிகர் ஒருவர் நீங்கள் இனப்பெருக்கம் செய்துவிட்டீர்களா, ஏனென்றால் நான் உங்களை இனப்பெருக்கம் செய்ய விரும்புகிறேன் கூறியுள்ளார்.
இந்த ஆபாசமான கேள்விக்கு பல ரசிகள்கள் திட்டிவந்த நிலையில் சமந்தாவோ பெருமிதமாக, ஒரு வாக்கியத்தில் ‘இனப்பெருக்கம்’ என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்துவது அதை முதலில் கூகுள் செய்திருக்க வேண்டுமா? என கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
