விவாகரத்திற்கு பின்னர் ஒரே இடத்தில் சந்தித்த சமந்தா – நாக சைதன்யா…..!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அவரது காதல் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து ஊரே பார்த்து வியக்கும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

samantha chaitanya

இப்படி இருக்கும் நிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறி இருவருமே ஒன்றாக விவாகரத்து செய்தியை அறிவித்தனர். அந்த சமயத்தில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்களின் பிரிவு தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருப்பினும் விவாகரத்திற்கு பின்னர் இருவருமே அவரவர் பணிகளில் மிகவும் பிசியாக இருந்து வந்தனர். சமந்தாவும் இனி தான் கெரியரில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக அறிவித்தார். அதன்படி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரே ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி சமந்தாவின் யசோதா படத்தின் ஷூட்டிங்கும், நாக சைதன்யாவின் பங்கர்ராஜு படத்தின் ஷூட்டிங்கும் ஒரே ஸ்டுடியோவில் நடந்துள்ளது. இதற்காக இவர்கள் இருவரும் ஒரே ஸ்டுடியோவில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர். இருப்பினும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லையாம். தங்களது வேலைகளை முடித்து விட்டு உடனே அந்த இடத்தை விட்டு இருவரும் காரில் பறந்து விட்டார்களாம்.

விவாகரத்திற்கு பின்னர் இருவரும் நண்பர்களாக தொடர்வோம் என அறிவித்திருந்தனர். எனவே சமீபத்தில் நாகசைதன்யா பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சமந்தா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதன் மூலம் இவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment