குத்தாட்டமா? வேண்டவே வேண்டாம்… அலறிய சமந்தா…. சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்த இயக்குனர்….

முன்பெல்லாம் சினிமாவில் ஹீரோயின்கள் கிளாமராக டிரெஸ் செய்யவோ நடனம் ஆடவோ மாட்டார்கள். ஐட்டம் பாடல் ஆடுவதற்காகவே தனி நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் இதுபோன்று ஒரு பாடலுக்கு அல்லது கவர்ச்சி கேரக்டருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தார்கள்.

சமந்தா

ஆனால் நாளடைவில் ஹீரோயின்களே கவர்ச்சி காட்டவும் குத்தாட்டம் போடவும் களத்தில் இறங்கி விட்டார்கள். தற்போது படங்களில் அனைத்து போர்ஷன்களையும் ஹீரோயின்களே கவர் செய்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் ஒரே ஒரு பாடலுக்கு பிரபலமான நடிகையை ஆட வைத்து வருகிறார்கள். அது கூட படத்தின் புரோமோஷன்க்காக தான்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பான் இந்தியா படமான புஷ்பா படத்தில் டாப் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தில் சமந்தா நடனம் தான் ஹைலைட்டே. இந்த டான்ஸை பார்க்கவே பலர் தியேட்டருக்கு படை எடுத்துள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ஆனால் முதன் முதலில் இயக்குனர் சுகுமார் சமந்தாவிடம் பேசியபோது இந்த ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட சமந்தா தயங்கினாராம். அதன்பின் இயக்குனர் சுகுமார் தான் ரங்கஸ்தலம் படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடியது போல் நீங்கள் இந்த படத்தில் நடனமாட வேண்டும் என கேட்டு கொண்டதோடு அவரை சமாதானப்படுத்தி இப்பாடலுக்கு நடனமாட சம்மதிக்க வைத்து உள்ளதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல ஒரு படத்தில் நடிக்க சமந்தா எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ அந்த தொகையை இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே சம்பளமாக சமந்தாவிற்கு வழங்கியுள்ளார்கள். டாப் நடிகைனா சும்மாவா. தற்போது புஷ்பா படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் இந்த பாடலும் ஒரு காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment