சினிமாவை தவிர தற்காப்பிலும் ஆர்வம் காட்டும் சமந்தா! அப்படி என்ன கத்துக்குறாங்க ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக நடித்து வருகிறார். தற்போழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமந்தா முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன்,சூர்யா,விஷால் என அனைவருடன் ஜோடியாக நடித்துள்ளார்.தற்போழுது கனவு கன்னியாக வளம் வரும் சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பார்.தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் சில நாட்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்துள்ளார்.

தற்போழுது பிசியாக தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.சமந்தா திருமண பிரிவிற்கு பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு படுங் கவர்ச்சியாக நடனம் போட்டிருந்தார்.மேலும் சமந்தா சகுந்தலம் , குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

samantha 2 16419763383x2 1

சமீபத்தில் ‘பேமிலிமேன் 2’ என்ற வெப் தொடரில் நடித்து இந்தி திரையுலகிலும் பிரபலமானார் சமந்தா. இதில் பெண் போராளியாக வந்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார்.இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் இந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவானும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

40 வயதிலும் டாப் ஹீரோயினுடன் போட்டி போடும் மீரா ஜாஸ்மின்..! லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்த தொடரிலும் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் அதிகம் இருப்பதால் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள படக்குழு கூறி இருந்தனர். தற்காப்பு கலை பயிற்சியை தற்போது சமந்தா தொடங்கி இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரபல தற்காப்பு கலைஞர்கள் மும்பை வந்து சமந்தாவுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். குத்துச்சண்டை, கராத்தே உள்ளிட்ட பல சண்டை பயிற்சிகளை கற்று வருகிறார். பயிற்சி முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment