அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகவுள்ளது
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. இந்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
சமந்தா ஏற்கனவே ஒரு வெப்தொடர் மற்றும் காத்துவாக்குல இரண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் அஜித் படத்தில் நடிக்கும் தேதிகள் அவருக்கு ஒத்து வந்தால் கண்டிப்பாக இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது
இதுவரை விஜய், சூர்யா, விஷால் உள்பட பெரிய மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்து விட்ட சமந்தா தற்போது அஜித் படத்திலும் நடிப்பது உறுதி செய்யப்படும? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்