தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாகசைத்தன்யாவை விவாகரத்து செய்தவுடன் சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் வந்தன.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கோலிவுட், ஹாலிவுட்டில் கால்பதித்து தற்போது மாஸ்காட்டி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா படத்தில் வந்த ஓ சொல்லீயா மாமா என்ற பாடல் இணையத்தில் வைரலாகி பட்டைய கிளப்பியது. இதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் சகுந்தலம் என்ற படத்தில் சமந்தா முக்கிய நடிப்பதாக தெரிகிறது.
இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மிகவும் வைரலானது. இதனிடையே நடிகை சமந்தா நிறைய போட்டோ ஷுட் நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிடுவது வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் பச்சை நிற உடையில் ஒரு போட்டோ ஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.