யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்த சமந்தா!

தன்னைப் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு நடிகை சமந்தா தொடர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். இதனையடுத்து அவரது முடிவு குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பின.

குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டதாகவும் அதனால்தான் நாகார்ஜுனா குடும்பத்தினர் அவரை விவாகரத்து செய்ய வைத்து விட்டனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமந்தாவின் விவாகரத்து காரணங்கள் குறித்து யூடியூபில் பல்வேறு சேனல்களில் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஒரு சில சேனல்கள் அத்துமீறி வதந்தியை பரப்பி வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளை வெளியிட்ட வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கை நடிகை சமந்தா தொடர்ந்து உள்ளதாகவும் இதுகுறித்து அந்த சேனல்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment