பிரபல நடிகை தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?

நடிகை சமந்தா விவாகரத்து அறிவிக்கப்பட்ட பின் அதிக படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் அவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாலிவுட்டிலும் சமந்தா நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி தயாரிக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் டாப்ஸியின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தாவுக்கு அங்கும் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே ஷாருக்கான் நடித்து வரும் ‘லயன்’ என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிப்பார் என்ற தகவல் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print