Connect with us

நாக சைதன்யாவுடன் ஜோடியாக வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா! காரணம் என்னவாக இருக்கும்!

article l 20211027817184762327000 1

பொழுதுபோக்கு

நாக சைதன்யாவுடன் ஜோடியாக வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா! காரணம் என்னவாக இருக்கும்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வசூல்ரீதியாகவும் விமர்சனங்கள் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது, முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ள சமந்தா திரைத்துறையின் கனவு கன்னியாக திகழ்கிறார்.

சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய ஊ ஆண்டவா பாடலின் மூலம் உலகளவில் பிரபலமடைந்துள்ளார், அதை தொடர்ந்து ‘அரேஞ்ச்மென்ட் ஆஃப் லவ்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வரும் நிலையில், ‘சிட்டாடல்’ உள்ளிட்ட பல ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

1 720

மேலும் நடிகை சமந்தா கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்கள் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தளபதி 67 படத்தில் வில்லியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு பட ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. அக்டோபர் 2021 இல் னது நான்கு வருட திருமண வாழ்க்கையை சமந்தா முடித்துக்கொண்டார். அதன்பிறகு இந்த ஜோடி தங்கள் வாழ்க்கையில் முன்னேற, ஒருவருக்கொருவர் தனித்தனியாக வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறது.

1 721 1024x616 1

விவாகரத்துக்கு பின்னர் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் அமீர்கான் உடன் இணைந்து லால் சிங் சத்தா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

samantha naga chaitanya.jpg.image .784.410

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் கதைக்களம் குறித்த வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இந்நிலையில் நடிகை சமந்தா, தான் விவாகரத்து செய்வதற்கு முன் நாக சைதன்யாவுடன் ஐதராபாத்தில் வாழ்ந்த வீட்டை பல கோடி கொடுத்து மீண்டும் வாங்கியுள்ளாராம்,. இந்த தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான முரளி மோகன் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா தனது முன்னாள் கணவனான நாக சைதன்யாவுடன் கொண்ட காதலை மறக்க முடியாமல் இந்த முடிவெடித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top