
Entertainment
பிக்பாஸ் தொகுப்பாளராக சமந்தா.. இது லிஸ்ட்லயே இல்லையே!
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகையாக பிஸியான வலம் வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த சமந்தா இன்று பான் இந்தியா நடிகையாக வளர்ந்துள்ளார்.தமிழில் முன்னணி நடிகரான சூர்யா, விஜய்,விஷால்,சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்தவர்.
2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி மக்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.அதை தொடர்ந்து சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ‘குஷி’ படத்திற்காக இணைந்துள்ளனர்.இராணுவ பின்னணியில் காதல் கதைக்களத்தில் ரொமான்டிக் காமெடி ஜானரில் படம் அமைக்கப்படுகிறது. காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி டிசம்பர் மாதம் 23-ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல மொழிகளில் அதிகமாக படங்களில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் தனது காதல் கணவரை பிரிந்த இவர் தனது நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றார்.புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பின்பு சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் மீண்டும் வந்தனர். ஏனென்றால் கவர்ச்சியான ஆட்டம் அனைவரையும் கட்டி இழுத்தது. அதை தொடர்ந்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படம், காணொளிகளை வெளியிட்டு இளைஞர்களை தன் பக்கம் திரும்ப வைத்து வருகின்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் தெலுங்கு 6வது சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நாகர்ஜுனா படப்பிடிப்பு காரணமாக தொகுத்து வழங்க முடியாததால் சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடை பேர்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
