டாப்ஸி படத்தில் சமந்தா! பாலிவுட்டுக்கு என்டராக வாய்ப்பு!!ஏற்றுக்கொள்வாரா சமந்தா?

தனது அழகாலும் தனது நடிப்பாலும் இன்று இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டு உள்ளார் நடிகை சமந்தா. சில வருடங்களுக்கு முன்பு இவர் நாகசைதன்யா என்னும் நடிகரை திருமணம் செய்தார்.சமந்தா

இவர்களின் திருமண வாழ்க்கை சில நாட்களுக்கு முன்பு முடிந்துபோனது. இவர்கள் இருவரும் ஒருமனதாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதனால் மனமுடைந்த சமந்தா தோழிகளோடு பல பகுதிகளுக்கு சென்று உள்ள வருகிறார்.

இந்த நிலையில் சமந்தாவுக்கு  பாலிவுட்டில் அறிமுகமாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனென்றால் நடிகை டாப்சி தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு இயக்கப்படும் திரைப்படம் என்பதால் நடிகை சமந்தாவுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமாக உள்ளார் என்றும் நடிகை டாப்சி கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். இதனால் சோகத்தில் உள்ள சமந்தாவுக்கு இவை சிறிய ஆறுதலாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment