முதன் முறையாக வில்லியாக நடிக்கும் சமந்தா

f552218921c92a2852697aa540adcd01

இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான, புகழ்பெற்ற வலை தொடர்களில் ஒன்றான ‘ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் 2020ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இப்போது, தி ஃபேமிலி மேன் 2ஆவது சீசனும் இயக்கப்பட்டு வருகிறது.

ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கியுள்ள தி ஃபேமிலி மேன் சீசன் 2 வலைத் தொடரில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, ஷரத் கெல்கர் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள் போன்ற தமிழ் கலைஞர்களும் இந்த வலைத் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஃபேமிலி மேன் 2 அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா. இது தான் அவர் நடிக்கும் முதல் வலை தொடர். இந்த வெப் சீரிஸில் சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.