இது காந்தி மண் என்று நிரூபித்த உழவர்களுக்கு சல்யூட்!! வாபஸ்க்கு வரவேற்பு;

இன்றைய தினம் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக காணப்படுகிறது. ஏனென்றால் மத்திய அரசு விதித்திருந்த 3 வேளாண் சட்டங்களையும் தற்போது வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது.

விவசாயிகள்

இதனால் விவசாயிகள் அனைவரும் இன்றய தினம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.ஏனென்றால் இதற்காக விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நம் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதன்படி வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற முடிவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

முழுக்க முழுக்க உழவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள் மதிக்கப்பட வேண்டும். இதுவே வரலாறு சொல்லும் பாடம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உழவர் பக்கம் நின்று போராடியதும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது நாம் பெருமை கொள்ளத்தக்கது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அறவழிப் போராட்டம் வழியே உரிமைகளை பெற்றெடுத்தது இந்தியா,காந்தி மண் என்று உழவர்கள் உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment