மஹாலட்சுமியின் அம்சமான உப்பு

உப்புவைதான் எல்லா விசயத்துக்கும் ஒரு முக்கிய நன்மை தரும் பொருளாக பார்க்கப்படுகிறது. ஆன்மிக ரீதியான விசயங்களுக்கும் பாஸிட்டிவான அனைத்து விசயங்களுக்கும் உப்பு ஒரு முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் ஒரு திருமணம் என்றால் முதன் முதலில் அனைவரும் திருமணம் நடக்கும் மண்டபம் செல்லும்போது அங்கு சென்று உப்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றைதான் முதலில் அங்கு வைப்பார்கள் அதன் பிறகே மற்ற பொருட்களை உள்ளே இறக்குவார்கள்.

உப்பு புனிதமானது மஹாலட்சுமி அம்சம் உடையதாகவும் கருதப்படுகிறது. உப்புக்கு பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் சக்தி உள்ளதால் அது ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமுத்திரராஜனின் மகள்தான் லட்சுமி என புராணங்களில் சொல்லப்படுகிறது. உப்புவை வைத்து மஹாலட்சுமியை பூஜைகள் செய்தால் சுபிட்சம் பெருகும். மஹாலட்சுமி பணத்துக்கு அதிபதி அதனால் தான் பணத்துக்கு நிகரான உப்பை இரவு 6 மணிக்கு மேல் விளக்கு போட்டுவிட்டால் அடுத்தவருக்கு கடனாக உப்பு கொடுக்க மாட்டார்கள். அப்படி கொடுத்தால் செல்வம் போய்விடும் என ஐதீகம் நிலவுகிறது.

மஹாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் நல்லது எனவும் சொல்லப்படுகிறது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print