கடந்த 5 நாட்களுக்கு முன் கோவையில் குப்பைத்தொட்டியில் தூய்மைப் பணியாளர்கள், பணியில் ஈடுபட்ட போது ஆணின் இடது கை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் துண்டிக்கப்பட்ட கையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மாவட்ட எஸ்.பி உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியதில் அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரின் கை என்பது கண்டறியப்பட்டது.
அதேசமயம் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் பிரபுவின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. அதேபோல் குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும் மாவட்ட எஸ்பி தெரிவித்து இருந்தார்.
தற்போது அழகு நிலைய ஊழியர் பிரபு கொலை வழக்கில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.